
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்ட வேலை பார்த்த சதீஷ்குமார் நண்பர்களுடன் வேலை முடிந்து நாளை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் புதர் மறைவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற சதீஷ்குமார் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் நண்பர்கள் அவரை தேடி சென்றனர்.
அப்போது தலை மற்றும் கழுத்து குதறப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சதீஷ் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் வாலிபரை தாக்கியது சிறுத்தையா கரடியா என ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.