பெங்களூரு பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த 76 வயது முதியவரான வேலாயுதத்தின் மகன் வினோத். தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது ஆடை தொடர்பாக இருவருக்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அப்போது வேலாயுதம் மகன் வினோத்திடம் ஷார்ட்ஸ்க்கு பதிலாக வேஷ்டி கட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு வினோத் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறி உள்ளது. இதில் கடும் கோபம் அடைந்த வினோத் தனது வயதான தந்தை வேலாயுதத்தின் தலையைப் பிடித்து சுவரில் மோதி காயப்படுத்தி உள்ளார்.

பின்னர் தரையில் கிடந்த அவரை கொடூரமாக மிதித்துள்ளார். இத்தகைய கொடூர தாக்குதலில் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வினோத்தின் சகோதரர் விமல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய வினோத்தையும் கைது செய்துள்ளனர்.