
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரமதேஸ் கோசல் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து குடும்பத்தின் செலவுகளை சமாளித்து வந்தார். சம்பவத்தன்று மாணவர் ஒருவர் பிரமதேஸ் வீட்டிற்கு சென்ற போது கொடூரமான காட்சிகளை பார்த்துள்ளார். இதையடுத்து மாணவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரமதேஸ் கோசலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதோடு அவரது வீட்டில் பிரமதேஸ் தந்தை, தாய், சகோதரி என மூன்று பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். பிரமதேஸ் கோசலிடம் விசாரித்தபோது தன்னிடம் அதிக பணத்தை குடும்பத்தினர் கேட்டதால் மன அழுத்தத்தில் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பிரமதேஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது. கடந்த திங்கள்கிழமை வழக்கை விசாரித்த மேற்கு வங்க நீதிமன்றம் குடும்பத்தினரைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பிரமதேஸ் கோசலுக்கு மரண தண்டனை விரித்து தீர்ப்பளித்தது.