தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதாவது அதிமுக அண்ணாமலையை விரும்பாததால் அவரை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை தலைவராக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால் தன்னுடைய பதவியை விட்டு விலகுவேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவு கொடுத்த அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டும் போஸ்டர்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது விருதுநகர் மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் சிபி சக்கரவர்த்தி என்பவர் தற்போது அண்ணாமலைக்கு ஆதரவு கொடுத்து ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த போஸ்டரில் தற்குறியுடன் அதாவது அதிமுகவுடன் ஒரு கூட்டணி வேண்டாம். கூடா நட்பு கேடாய் முடியும். மீண்டும் அண்ணாமலை வேண்டும் போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக மீண்டும் அண்ணாமலை தலைவராக வேண்டும் என்று பாஜக போஸ்டர் ஒட்டிய நிலையில் தற்போது அதிமுகவை விமர்சித்து அண்ணாமலைக்கு ஆதரவு கொடுத்து ஒட்டி உள்ளனர். மேலும் இந்த போஸ்டர் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌