
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிக அளவு நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். அடுத்து சுந்தரபாண்டியன் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து பீட்சா என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு வரிசையாக தொடர் ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, வில்லன் கேரக்டரிலும் நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பில் கடைசியாக மகாராஜா மற்றும் விடுதலை-2 படங்கள் வெளியானது. இதில் மகாராஜா படம் வசூலில் சக்கை போடு போட்டது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி புதுச்சேரி அடுத்த பூரணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி செந்தில் கண்ணன் என்பவரிடம் கர்லா கட்டை சுற்றுதல் மற்றும் தற்காப்பு காலைகள் பயிற்சி பெற்றுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.