
பிக் பாஸ் புகழ் தர்ஷன் கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையில் நீதிபதி மகன் மற்றும் தர்ஷன் இடையே கைகலப்பு ஏற்பட்டதன் காரணமாக தர்ஷனை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். ஆனால் நீதிபதியின் மகன் மற்றும் அவர் குடும்பத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து ஷனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பல வருடங்களுக்கு முன்பாக பிக் பாஸ் மற்றும் ஷணம் ஷெட்டி ,இடையே நடந்த பிரச்சினை அனைவருக்கும் தெரிந்ததுதான். இருவருக்குமே நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தர்ஷன் ஷனம் செட்டியை திருமணம் செய்ய மறுப்பதாக போலீசில் புகார் அளித்து அது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. தற்போது தர்ஷன் பார்க்கிங் பிரச்சினையில் கைதாக இருப்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Keeping my personal emotions aside I’m trying to objectively look into the sudden #Arrest of #BiggBoss #Tharshan ..
Irrespective of who it is #justice should be #fair!
For just a #Parking issue to get escalated so quickly into an arrest is definitely #questionable!
Statements… pic.twitter.com/NOTDFBKfYG— Sanam Shetty (@ungalsanam) April 4, 2025
அதில் தர்ஷன் கைது என செய்தி கேட்டது எனக்கு ஒரு நொடி சந்தோஷமாக இருந்தது. ஆனால் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்தேன் .விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளார்கள். விசாரணையே திங்கட்கிழமை தான் நடக்கும். ஹாஸ்பிடலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதி மகன் சொல்வது தான் உண்மை என்றால் சிசிடிவி காட்சியை வெளியிட்டிருக்கலாமே? தப்பு பண்ணாதவங்க தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றம்” என்று சனம் செட்டி தர்ஷனுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.