திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் தரிசன டிக்கெட் முன்னதாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் புக் செய்யலாம்.

இந்த நிலையில் நவம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கு டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.