தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டவர். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது, அதில், X தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு இருப்பதாகவும், அதை தயவுசெய்து யாரும் பின்தொடர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த போலி கணக்கை சுமார் 80 ஆயிரம் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.