இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகிறது. அதிலும் குழந்தைகளைப் பற்றிய வீடியோ என்றால் கேட்கவா வேண்டும் பார்க்க பார்க்க ரசனை தான். குழந்தைகள் சுட்டித்தனமாக செய்யும் விஷயங்கள் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அதே நேரத்தில் குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகளும் கூட. அப்படிப்பட்ட ஒரு புத்திசாலி குழந்தையின் வீடியோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ஒரு சிறுவன் படுக்கையில் அமர்ந்திருக்க அருகில் கைக்குழந்தை இருக்கிறது. அப்போது திடீரென வீட்டின் கபோர்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த சிறுவன் குழந்தையை தூக்க முயற்சித்த நிலையில் அவனால் முடியவில்லை. உடனடியாக தீயை அணைப்பதை எடுத்து வந்த அந்த தீயை சிறுவன் அணைத்து விட்டான். பின்னர் அனைத்தும் முடித்த பிறகு அந்த பொருளை குப்பைத் தொட்டியில் கொண்டு போட்டான். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.