சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தி உள்ளது. ‘Joker of India’ என்ற X -ல் ஏப்ரல் 21ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், ஒரு இளைஞரும், இரண்டு சிறுமிகளும் லிப்டுக்குள் நுழைகின்றனர். பின்னர், அந்த இளைஞர், அவர்களில் ஒருவருடன் மோசமான வகையில் நடந்து கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. இது, லிப்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுமையாக பதிவாகி உள்ளது.

இந்தக் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் கூறியது, “படிக்க வேண்டிய வயதில் இப்படி நடந்து கொள்வது என்ன அர்த்தம்?” என்பதே. அவர்கள் அனைவரும் வயதில் சிறுவர்களாகவே தெரிகின்றனர் என்பதாலும், இது சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக கட்டுப்பாடுகள் பற்றிய பெரும் கேள்விகளை எழுப்புகிறது. இந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்று, பல்வேறு சமூக அமைப்புகளின் கண்டனங்களை சந்தித்து வருகிறது.

 

“இவர்களே நம் எதிர்காலம் என்றால், அந்த எதிர்காலம் எப்படி இருக்கும்?”, “இது பாதுகாப்பு கேமராவால் தெரிந்தது; இல்லையெனில் எதற்கெல்லாம் மாறியிருக்கும்?” என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். சிலர் பெண்கள் மீது பழி போடுவதை போல பெண் விரோத கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த சம்பவம், சிறுவர்களுக்கு நேரிடும் இணைய பாதிப்புகள், பெற்றோர் கண்காணிப்பு தேவை, மற்றும் சமூக கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.