
சமீபகாலமாக அடுத்தடுத்து தமிழ் நடிகர்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26 ஆம் தேதி நடிகர் சேஷு, மார்ச் 29 நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து இன்று அதிகாலை நடிகர் விக்னேஸ்வர ராவ் (62) உடல்நல குறைவால் உயிரிழந்து உள்ளார். தொடர் மரணத்தால் ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் உள்ளது.