
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மார்ச் 26-ஆம் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் களமிறங்க தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் “உரிமை காக்கும் அணி” எனும் பெயரில் ஒரு புது அணி உருவாகி உள்ளது. இந்த அணியில் பிரபலமான திரைப்படம் தயாரிப்பாளர்கள் உள்பட 300-க்கும் அதிகமானோர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த அணியின் அலுவலகம் சென்னையிலுள்ள ஓட்டல் ஒன்றில் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.