தமிழ் சினிமாவின்  மூத்த நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி மற்றும் த.செ‌. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள வாழை திரைப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். அதாவது நம்மை குழந்தை பருவத்திற்கே வாழை திரைப்படத்தின் மூலமாக மாரி செல்வராஜ் அழைத்து சென்றுவிட்டார். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு அற்புதமான மற்றும் ஒரு தரமான திரைப்படம் வெளிவந்துள்ளது என்று மாரி செல்வராஜை பாராட்டியிருந்தார்‌.

மேலும் இதற்கு மாரி செல்வராஜூம் நன்றி தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்‌. அதில் அன்று பழைய தகர பெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளே இருந்து அவனுடைய பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்கும் அரவணைப்புக்கும் மிக்க நன்றி சூப்பர் ஸ்டார் அவர்களே என்று பதிவிட்டுள்ளார். மேலும் வாழை திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி  வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.