தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து விமர்சித்துள்ள சீமான், இளைஞர்கள் வாக்களிப்பதற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் அளிக்கிறார்கள், தமிழ் புதல்வன் எல்லாம் ஒரு திட்டமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், கல்லூரியில் படிக்கின்ற இளைஞர்களும், இளம் பெண்களும் தான் சீமானுக்கு வாக்களிக்கின்றனர். அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கி இருக்கின்றனர். தமிழ் புதல்வன் திட்டத்தில் உள்ள இளைஞர்கள் தான் அடுத்த தேர்தலில் Costly Voters என்று கூறியுள்ளார்.