தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால் ஸ்டாலின் மாடல் அரசு வீழ்வதுதான் ஒரே வழி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு கிடையாது. இதை எவராலும் மறுக்க முடியாது. சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதும், அரசு பள்ளி முதல் ஓடும் ரயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு கிடையாது என்பது வேதனைக்குரியது. இந்த திமுக ஆட்சியாளர்களா பெண்களை பாதுகாக்க போகிறார்கள்.

யார் அந்த சார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. அதைக் கேட்டால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட குற்றவாளிகளின் பாட்டன் வம்சத்தில் இருப்பவர்கள் யாராவது தொலைதூரத்தில் அதிமுகவுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று புலனாய்வு  செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால் அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்து அதிமுகவின் நல்லாட்சி அமைவது தான் ஒரே வழி என்று குறிப்பிட்டுள்ளார்.