
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக திமுக ஆட்சி தான் அமையும். எந்த திசையிலிருந்து யார் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது. டெல்லியில் இருந்து வந்தாலும் சரி. தமிழ்நாட்டில் இருந்து வந்தாலும் சரி கண்டிப்பாக 2026 திமுக வெற்றி என்பது உறுதி என்று கூறினார். முன்னதாக தமிழக வெற்றி கழகம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் குடும்ப ஆட்சி செய்யும் திமுகவை தகர்த்தெறிவோம் என்று கூறிய நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சி மீண்டும் அமையும் என்று தெரிவித்திருந்தது.
அதோடு விக்கிரவாண்டியில் விஜயின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில் குடும்ப ஆட்சி செய்யும் திமுக தான் தங்களுடைய முதல் எதிரி என்று அவர் நேரடியாக அறிவித்திருந்தார். தற்போது அதே விக்கிரவாண்டியில் வைத்து உதயநிதி ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் வெற்றியை யார் வந்தாலும் தடுக்க முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது விஜய்க்கு சவால் விடுவது போன்று மறைமுகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது