
திமுக நட்சத்திர பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சீமான் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆண்டிபட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, சீமானை தமிழ்நாட்டில் வாழ விடலாமா? என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
மேலும் ஒருவேளை சீமான் இந்த பகுதிக்கு வந்தால் இங்கே இருக்கிற தாய்மார்கள் அவரை எதையோ கொண்டு அடித்தார்கள் என்ற செய்தியை டிவியில் பார்த்தால் மகிழ்ச்சி அடைவேன் எனவும் கூறியுள்ளார்.