
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி பொற்காலம் என்று தற்போது அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதமாக கூறியுள்ளார். அதாவது சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், மகளிர் விடியல் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இப்படி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்துகிறார். அவர் செயல்படுத்தும் திட்டங்களை வெளி மாநிலங்கள் மட்டும் இன்றி வெளிநாட்டினர் கூட கடைபிடிக்கிறார்கள். அதே வழியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததை பார்த்து பொதுமக்கள் அவரை பாராட்டுகிறார்கள். இந்திய வரலாற்றில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை திறம்பட நடத்தி காட்டினார். மேலும் மக்களுக்காக உழைக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு பொதுமக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறினார்.