அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செம்மலை திமுக கட்சியை தற்போது விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக ‌அரசியலில் இதுவரை தனித்து நின்று வென்ற வரலாறே திமுகவுக்கு கிடையாது. அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டதாக வெளிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது.

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்ற உண்மையை மறைப்பதற்காக தான் அதிமுக வாக்கு வங்கி குறைந்து விட்டதாக புரளி கிளப்புகிறார்கள். கூட்டணி விரிசலை சரி செய்வதற்காகவே இப்படிப்பட்ட தகவல்களை பரப்புகிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறும். மேலும் தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அமர்வார் என்று கூறினார்.