
தமிழகத்தில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக அதே கூட்டணியில் அடுத்து வரும் தேர்தலை சந்திக்கும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைக்கும் உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய நிலையில் இதனை எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்ததோடு ஒருபோதும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கண்டிப்பாக அதிமுக மட்டும் தான் தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் கூறிவிட்டனர்.
இந்நிலையில் தற்போது புதிய பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் ஒட்டிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வருங்கால முதல்வரே என்று நயினார் நாகேந்திரனுக்கு பாளையங்கோட்டையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் முன்னதாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதெல்லாம் பற்றி அதிமுகவுடன் தேசிய தலைமை தான் பேசி முடிவெடுக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.