எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதை விமர்சித்திருந்தார். அதாவது ரெய்டுக்கு பயந்தும் நாட்டை விட்டு தப்பி ஓடிய தம்பியை காப்பாற்றவும் தான் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதாக கூறினார். இதனை தற்போது அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

பாஜகவோடு கூட்டணி வைத்தற்குக் காரணம் பழனிசாமியின் குடும்பம்தானே!

“படுத்தே விட்டாரய்யா…” என்ற சொல்லுக்கு மொத்த உருவமே கூவத்தூர் பழனிசாமி

முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத்தான் செல்கிறார்

அமித்ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு. தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளுக்காக டெல்லி செல்லாத நீங்கள் உங்கள் மகன் மிதுனுக்காக தானே அமித்ஷாவை சந்தித்தீர்கள்.

உங்க குடும்பம் ரெய்டில் சிக்க கூடாது என்பதற்காகத்தானே பாஜகவுடன் கூட்டணி வைத்தீர்கள். பொள்ளாச்சி தொடங்கி அண்ணா நகர் வரை பாலியல் குற்றவாளிகளுக்கு அடைகலம் கொடுத்து பாதுகாத்த பழனிச்சாமி தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறிய விஷம பிரச்சாரம் செய்கிறார்.

மேலும் தமிழ்நாட்டு மக்களை மடைமாற்றலாம் என மடத்தனமான அரசியல் செய்தால் மக்கள் நம்பிவிடுவார்களா என்று கூறியுள்ளார்.