தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் வகுத்து கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் தொடங்கியுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்என்பது குறித்து லயோலா கல்லூரி மணரவமைப்பு சார்பில் உருவாக்கப்பட்ட அமைப்பு  கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவில் முதல்வர் ஸ்டாலின் முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் இருக்கிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலினுக்கு 77.83 சதவீதம் பேரும், எடப்பாடி பழனிச்சாமிக்கு 73.30 சதவீதம் பேரும், உதயநிதி ஸ்டாலினுக்கு 67.99 சதவீதம் பேரும், 64.58% பேர் அண்ணாமலைக்கும், 60.58 சதவீதம் பேர் நடிகர் விஜய்க்கும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

இதில் முதல்வர் ரேசில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை ஆகியோர் விஜயை பின்னுக்கு தள்ளி முந்தியுள்ளனர். மேலும் அதே நேரத்தில் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்ற கேள்விக்கு 17.7 சதவீதம் பேர் திமுகவுக்கும், 17.3% பேர் அதிமுகவுக்கும், 12.20% பேர் தமிழக வெற்றிக்கழகத்திற்கும், 5 சதவீதம்பேரு பாஜகவுக்கும் ஆதரவு கொடுத்துள்ளனர்.