நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் பண பட்டுவாடா ஜோராக நடக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரம் வணிகர்கள் எடுத்துச் செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்.