தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதமாக விதிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்று பல வருடங்களாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.