
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று மாணவியிடம் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் சார் என்ற ஒருவருடன் இருக்க வேண்டும் என்று ஞானசேகரன் மிரட்டியதாகவும் இந்த வழக்கில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் மாணவி கூறியதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இதனை தமிழக காவல்துறை மறுத்துள்ள நிலையில் புலன் விசாரணை நேர்மையான முறையில் நடைபெறுகிறது என்றும் தேவை இல்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் எதிர்கட்சிகள் யார் அந்த சார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இது தொடர்பாக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் நேற்று பாஜக மகளிர் அணி சார்பில் நீதி பேரணி நடத்த முயன்ற போது குஷ்பூ உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர். இந்நிலையில் பாஜக மகளிர் அணி தற்போது ஆளுநர் ரவியை நேரில் சென்று சந்தித்துள்ளனர். அதன்படி தமிழிசை சௌந்தரராஜன், நடிகை ராதிகா, நடிகை குஷ்பூ, விஜய தரணி உள்ளிட்ட அதிமுக மகளிர் அணி முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆளுநர் ரவியை நேரில் சந்தித்தனர். மேலும் அவர்கள் சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.