தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது இன்று சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட விஷயங்களை செய்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் குறைதீர் முகாம் நடத்தப்படும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

அதன்படி 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் நம்பர் மாற்றம், அங்கீகாரச் சான்று உள்ளிட்ட பொது விநியோகம் தொடர்பான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.