
தமிழகத்தில் 7 முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு (SL) பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் இம்மாத இறுதி முதல் அமலாகிறது. சென்னை-ஜோத்பூர், கோவை -ராமேஸ்வரம், கோவை -குஜராத். கி கோதி, சென்னை – மும்பை, மன்னார்குடி-பகத் சென்னை-நாகர்கோவில் உள்ளிட்ட ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி, முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழைகளை பாதிக்கும் நடவடிக்கையை ரயில்வே குறைத்து அதிக எண்ணிக்கையில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.