நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நேற்று எண்ணப்பட்ட நிலையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 2 இடங்களை பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால் இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பாஜகவால் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை ஒருபோதும் ஆள முடியாது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மேலும் இந்த வீடியோவை தமிழக காங்கிரஸ் கட்சி தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.