
தமிழகத்தில் சில நேரங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க முடியாத பக்தர்கள் பலரும் வீட்டிலிருந்து கொண்டு கோவில் பிரசாதங்களை பெற்று வருகின்றனர். அதன்படி தற்போது வரை 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பி வைக்கின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவில் பிரசாதமும் பக்தர்களின் வீட்டுக்கு தபால் மூலமாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலில் இருந்து தீர்த்தம், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பத்மதர்ஷினி அம்பாள் படம்,விபூதி மற்றும் குங்குமம் ஆகிய பிரசாதம் பக்தர்களின் வீட்டுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதற்கு பக்தர்கள் என்ற இந்து சமய அறநிலையத்துறையில் www.hrce.tn.gov.in இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம் எனவும் தபால் மூலமாக பிரசாதம் பெற பக்தர்கள் 145 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.