
தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை பெய்யும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 27ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இங்கு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.