தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மயிலாடுதுறை, சென்னை மற்று

இந்த நிலையில் புயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் புயல் கரையை கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் புயல் குறித்த வதந்திகளை மக்கள் நம்பி அச்சப்பட வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடல் அலை அதிகரிப்பு காரணமாக யாரும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.