
தமிழக முதல்வர் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களில் ஒருவன் நிகழ்ச்சியின் வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். குறிப்பாக மாநிலம் முழுவதும் தான் எங்கு சென்றாலும் தமிழக பெண்கள் தன்னை அப்பா என்று அன்போடு அழைப்பதாக மகிழ்ச்சியாக கூறினார். அதன் பிறகு தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது பற்றி பேசிய அவர் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கையை திமுக அரசு எடுத்து வருகிறது என்றார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கை அனைத்துமே பாஜகவின் அறிக்கை போன்று இருக்கிறது.
பாஜகவின் டப்பிங் வாய்ஸ் தான் எடப்பாடி பழனிச்சாமி. நாம் பாஜகவுடன் கள்ளக் கூட்டணியில் இருக்கிறார் என்று சொல்வதை அவர் நிரூபிக்கிறார் என்றார். அதாவது டெல்லி தேர்தலில் இந்தியா கூட்டணியின் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் செய்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் “அப்பா” எனும் பொறுப்பு அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா? கல்விக்காக நிறைய செய்ய வேண்டும்! கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா? டப்பிங் வாய்ஸ் பழனிசாமி! பாலியல் குற்றங்கள் Food and Fitness வெளிமாவட்டப் பயணங்கள் பற்றி எரிந்த மணிப்பூர் விவகாரங்கள் போன்றவைகள் பற்றியும் பேசியுள்ளார்.
#உங்களில்_ஒருவன் பதில்களில்:
♥️ “அப்பா” எனும் பொறுப்பு
💵 அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா?
📚 கல்விக்காக நிறைய செய்ய வேண்டும்!
🤝 கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா?
🎭 டப்பிங் வாய்ஸ் பழனிசாமி!
👮 பாலியல் குற்றங்கள்
🍛 Food… pic.twitter.com/55q8xrbVce
— M.K.Stalin (@mkstalin) February 15, 2025