தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் சார்பாக நடைபெறும் தேர்வு மூலமாக உதவி தொகை வழங்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான தேர்வுக்கு ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வு வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.