தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை அடுத்து பத்திரப்பதிவு துறை காலிப் பணியிடங்களையும் தேர்வின் வாயிலாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, பத்திர பதிவு துறை காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வின் வாயிலாக நிரப்பபடும் என தெரிவித்தார்.

இப்போது பத்திரப்பதிவு துறையிலுள்ள 85 காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். அதோடு பத்திரங்கள் பதியப்படும் போது ஏற்படும் கால தாமதத்தை சரி செய்யவும் உடனுக்குடன் பத்திரங்களை பதிவுசெய்யும் வகையிலும் புது மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தகவல் தெரிவித்தார்.