
தமிழகத்தில் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் நடபாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரையில் இளங்கலை பட்டப்படிப்புக்கு 2,15,809 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே இன்றுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் கால அவகாசம் திட்டமிட்டபடி நிறைவு பெறுகிறது. அதே நேரத்தில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசத்தை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.