
தமிழக அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்கு பயன்படும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்பவர்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசு பதக்கம் மற்றும் பரிசு வழங்க இருக்கிறது.
இந்த விழா டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 28 ஆகும். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு 10 கிராம் தங்க நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் இதற்கு தகுதி உள்ளவர்கள் https://awards.tn.gov.in/என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.