
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு அடங்கிய பரிசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான டோக்கன்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டு அதன்படி பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. முதல்வரின் புகைப்படம் அடங்கிய டோக்கனில் கடையின் பெயர் , ரேஷன் அட்டை எண், குடும்பத் தலைவரின் பெயர் ஆகியவை இடம் பெற்றுள்ளது.