கள்ளக்குறிச்சி, வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி, மயக்கத்துடன் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுகவும்.

மழை காலங்களில் இக்காய்ச்சல் உருவாகுவது வழக்கம் என்றாலும், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடு அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், கிருமி நாசினி தெளித்தல், மருத்துவ முகாம் அமைத்தல், நோய் தொற்றில் இருந்து மக்களை எளிதில்ம்  பாதுகாக்கலாம்.