தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வருகிற 19ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் நேற்று சிபிஎஸ்இ ரிசல்ட் வெளிவந்தது. அதாவது நேற்று சிபிஎஸ்இ 12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டதால் தற்போது பத்தாம் வகுப்பு ரிசல்ட் முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மே 16ஆம் தேதி அதாவது நாளை பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதேபோன்று நாளை அதாவது மே 16ஆம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். நாளை  காலை 9 மணி அளவில் ரிசல்ட் வெளியாகும். மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் செல்போன் நம்பருக்கும் குறுஞ்செய்தி வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.