
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் மேல்முறையீடு செய்தவர்களுக்கு நாளை ₹1000 வராது. அவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பணம் செலுத்தப்படும் என தெரிகிறது.