மே- 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உத்தரவை மீறி நாளை மது விற்பனை செய்யக்கூடாது. மாறாக விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.