தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதம் இந்த வருடம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் மே 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.