
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். பொதுவாக முக்கிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். குறிப்பாக சுதந்திர தினம், குடியரசு தினமும் மற்றும் தலைவர்களின் ஜெயந்தி விழாக்கள் போன்றவைகளின் போதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
அந்த வகையில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை வழங்கப்பட்டதால் சட்டவிரோதமாக டாஸ்மாக் கடைகளை திறந்து அல்லது கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தெரிய வந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.