
தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின் போது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுதந்திர தின பொது விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 365 சிறப்பு பேருந்துகளும், மதுரை, கோவை, நெல்லை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.