
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 11 மணியளவில் முதல் மாநாடு குறித்த தேதியை அறிவிக்க இருக்கிறார். அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறும் நிலையில் அதற்கு காவல்துறையினரின் அனுமதி கிடைத்துவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மாநாடு நடைபெறும் தேதியை விஜய் அறிவிக்கிறார். செப்டம்பர் 23-ல் முதல் மாநாடு நடைபெறும் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று முதல் மாநாடு குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடும் நிலையில் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான கொண்டாட்டங்கள் சிறப்பான முறையில் இருக்க வேண்டும் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் இன்று அறிவிப்பு வெளியிடும் நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக நிர்வாகிகள் அதனை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.