
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு சேவைகளை பொதுமக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதில் பெற வேண்டும் என்பதற்காக அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் மக்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் புதிய கட்டிடத்திற்கான அனுமதியை ஆன்லைனில் பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கின்றார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆன்லைனில் அனுமதி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி கட்டடத்திற்கான அனுமதியை இன்று முதல் https://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.