
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தி தக்காளி, கீரைகள், அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை கொண்டு தோட்டம் அமைக்க பள்ளி ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை பள்ளிகளில் மதிய உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.