
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது இரவு நேரத்தில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு அந்த பெண் டாக்டர் தன்னுடைய ஆண் தோழருடன் ஆட்டோவில் ஏறினார். அப்போது அந்த ஆட்டோவில் ஏற்கனவே 4 பேர் இருந்தனர். அதாவது அது ஷேர் ஆட்டோ என்று கூறியதால் அதனை நம்பி அந்த பெண் மருத்துவர் ஏறிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வேறொரு பகுதிக்கு அழைத்து சென்று விட்டார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து கத்தி முனையில் அந்த டாக்டரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதோடு அவர்களின் ஏடிஎம்ஐ வாங்கி அதிலிருந்த 40,000 பணம் மற்றும் 2 சவரன் தங்க நகைகள் போன்றவற்றையும் பறித்துக் கொண்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அப்போது குற்றவாளிகள் 4 பேருக்கு தலா 20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதில் ஒருவர் சிறுவன் என்பதால் தண்டனை குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது சிறுவனுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி சிறுவனுக்கும் நீதிமன்றம் 20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.