
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இழப்பீடு தொகை போதாது எனவும் பலரும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதன் பிறகு நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை குற்ற செயல்களில் ஈடுபடும் முனைபவர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நீதிமன்றம் வழங்கிய 85 லட்சம் ரூபாய் இழப்பீடு சேர்த்து தலா 25 லட்சமும் சேர்த்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.