
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3 மற்றும் என் 3 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தற்போது குளிர் தொலைந்து வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து வருவதால் காலநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் பரவி வருகிறது.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல் மற்றும் உடல் வலி போன்ற தொந்தரவுகள் உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாகவும் பரவுகின்றது. இந்த வைரஸ் காய்ச்சலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் நலனை கருதி சிகிச்சை அளிக்கும் விதமாக வருகின்ற மார்ச் 10ஆம் தேதி தமிழகத்தில் சுமார் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மூலம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.